சென்னை : அமராவதி அணையில் இருந்து, இன்று(பிப்.,8) முதல் வரும், 28ம் தேதி வரை, பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த, 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் பாசன பரப்புகளில், கதிர் நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு, இன்று முதல் வரும், 28ம் தேதி வரை, தகுந்த இடைவெளி விட்டு, அமராவதி ஆற்றின் மதகு வழியாக, அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள, 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
Advertisement