சென்னை : தமிழகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில், ஏற்கனவே தரகர்கள் துணையுடன், பத்திர பதிவில் பல்வேறு மோசடிகள் நடந்ததாக புகார்கள் உள்ளன.
தணிக்கையிலும், முறைகேடுகள் நடந்தது அம்பலமானது. இந்த முறைகேடுகளால் அரசுக்கும், பதிவுத் துறைக்கும், பல கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. 'முறைகேட்டில் தொடர்புடையோரை கண்டறிய, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது.
இது குறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த கால முறைகேடுகளை கண்டறிய, சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக, 2021 - 22 நிதி ஆண்டில், 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. புலனாய்வுக் குழுவுக்கான பணியிடங்களும் வரையறை செய்யப்பட்டது.
ஆனால், எந்த இடத்தில், யார் இருப்பார் என்பதற்கான உத்தரவுகள் இன்று வரை வரவில்லை. இந்த விஷயத்தில், அரசு அனுமதித்த பிறகே, யார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு செயல்படும் என்பது தெரியவரும். அதன் பிறகே, முறைகேடுகள் மீதான விசாரணை துவங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement