சென்னை : 'தர்மத்திற்கு சோதனை வரலாம்; ஆனால் வீழ்ந்து விடாது என பது வரலாற்று உண்மை. தர்மம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வரை, எங்களது முயற்சிகள் தொடரும்' என, அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தன் வாழ்க்கையை சுயநலமில்லாமல், பொது நலத்தோடு தர்மத்தின் வழியில் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை ஒரே நேர்க்கோட்டில் செயல்படுத்துபவர்தான் உண்மையான தலைவர்.
அப்படி தர்மத்தின் வழியில் செயல்படும் தலைவர் செயல்கள், ஒரு சில மனிதர்களுக்கு தற்காலிகமாக, கசப்பு மருந்து போல் தெரியலாம். ஆனால், அதுதான் நிரந்தர சஞ்சீவினி மருந்தாக இருக்கும் என்பதே உண்மை.
ஜெயலலிதா ஒருவர் தான் பன்னீர்செல்வத்தை முழுமையாக அறிந்து, அவரது திறமையை, விசுவாசத்தை, உழைப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர். அப்படிப்பட்ட நீதி தேவதை தற்போது இல்லையே என்பதை நினைக்கும்போது மனம் கலங்குகிறது.
தர்மத்திற்கு சோதனை வரலாம்; ஆனால், வீழ்ந்து விடாது என்பது வரலாற்று உண்மை. தர்மம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வரை, எங்களது முயற்சிகள் தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement