சென்னை : தமிழக நீர்வளத் துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன.
கடந்தாண்டு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இதனால், அணைகளில் நீர் கையிருப்பு, 190 டி.எம்.சி.,க்கு மேல் அதிகரித்தது.
பருவமழை ஓய்ந்துள்ள நிலையில், அணைகளில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்து குறைந்துள்ள நிலையில், நீர் திறப்பு தொடர்வதால், அணைகளில் நீர் கையிருப்பு சரிந்து வருகிறது.
தற்போது, 90 அணைகளிலும் சேர்த்து, 158 டி.எம்.சி., நீர் கையிருப்பு உள்ளது. இது, மொத்த கொள்ளளவில், 70.45 சதவீதம்.
Advertisement