மேலுார் : வெள்ளலுார் நெல் கொள்முதல் நிலையத்தில் 25 நாட்களுக்கு மேலாக சரிவர நெல் கொள்முதல் செய்யாமல் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூடைகள் தேங்கி நனைந்து முளைவிட்டன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொண்டனர். கூடுதல் இயந்திரங்களை கொண்டு வந்து நெல் கொள்முதல் செய்ய துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.