மதுரை : மதுரையில் 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் தேனி ஆனந்தம் சில்க்ஸ் இணைந்து நடத்தும் மெகா வினாடி வினா இறுதி போட்டி தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலில் இன்று (பிப்.,8) காலை 9:00 - மதியம் 1:00 மணி வரை நடந்தது.

பள்ளி மாணவர்களின் அறிவுத் தேடலின் களஞ்சியமாக விளங்கும் தினமலர் பட்டம் இதழ் சார்பில் 'அறிவுக்கு விருந்தும், மாணவருக்கு விருதும்' கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளில், பதிவு செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 175 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான இறுதிப் போட்டிகள் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பரிசுகள் வழங்குகிறார். ரூ.10 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை மீனாட்சி பேன்ஹவுஸ், சிமா டாட்டா, குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி ஆகியன இணைந்து வழங்குகின்றன. இந்நிகழ்ச்சி தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிப்பரப்பு பட்டப்பட்டது.
https://www.dinamalar.com/video_main.asp?news_id=4638&cat=live