ஒசூர் விமான நிலையம் கைவிடப்படுகிறது

Updated : பிப் 08, 2023 | Added : பிப் 08, 2023 | கருத்துகள் (31) | |
Advertisement
புதுடில்லி: பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ., சுற்றளவுக்குள் வேறு விமான நிலையங்கள் அமைக்கப்படக்கூடாது என்ற ஒப்பந்தத்தை தொடர்ந்து ஒசூர் விமான நிலையத்தை கைவிட மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் உதான் திட்டப்படி சென்னை - ராமநாதபுரம் இடையே விமானங்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக
Hosur, airport, UDAN, ஒசூர், விமான நிலையம், உதான், மத்திய அரசு, விகேசிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ., சுற்றளவுக்குள் வேறு விமான நிலையங்கள் அமைக்கப்படக்கூடாது என்ற ஒப்பந்தத்தை தொடர்ந்து ஒசூர் விமான நிலையத்தை கைவிட மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் உதான் திட்டப்படி சென்னை - ராமநாதபுரம் இடையே விமானங்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பார்லிமென்டில் தி.மு.க., எம்.பி., வில்சன் எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் விகே சிங் அளித்த பதில்: 2033க்கு முன்னர், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில்(பெங்களூரு விமான நிலையம்) இருந்து 150 கி.மீ., சுற்றளவுக்கு புதிய விமான நிலையங்களை அமைக்கவும், மேம்படுத்தவும் அனுமதி கூடாது என ஒப்பந்தம் உள்ளது. இதனால், ஒசூர் விமான நிலைய திட்டத்திற்கு அனுமதியில்லை. இந்த ஒப்பந்தத்தில் மைசூரு மற்றும் ஹசன் விமான நிலையங்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஉதான் திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்கும் வகையில் சேலம், நெய்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் வேலூர் விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. நெய்வேலி மற்றும் வேலூர் விமான நிலையங்களுக்கு லைசென்ஸ் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. சேலம் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. தஞ்சாவூருக்கு, இந்திய விமானப்படை நிலங்களை வழங்க உள்ளது. ராமநாதபுரம் விமான நிலையத்திற்கு மாநில அரசு , விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ஒப்படைக்க உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (31)

மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
09-பிப்-202300:54:06 IST Report Abuse
மலரின் மகள் இதனால் தமிழகம் பாதிக்கப்படுவதால், தமிழ் நாட்டிற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். அல்லது தமிழ் நாட்டினருக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் விமானங்களில் பயணம் செய்தால் ஏர்போர்ட் கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது. தலைமகத்திடம் கேட்காமலேயே இது போன்ற ஒப்பந்தங்களை செய்து கொண்டார்களா என்ன?
Rate this:
Cancel
Ramanathan Muthiah - Madras,இந்தியா
08-பிப்-202322:59:48 IST Report Abuse
Ramanathan Muthiah இப்படி தமிழ்நாட்டிற்கு அநீதி செய்தால், எப்படி பிஜேபிக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள் ⁉️ UDAN திட்டத்தில் கூட ஓசூர் தகுதி இல்லையா ⁉️⁉️ கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியது, மக்கள் தமிழக பிஜேபி தலைவர் திரு அண்ணாமலையிடம் தான் இந்த கேள்வியை கேட்கணும் ‼️ சென்னைக்கும் பாண்டிச்சேரி தூரம் வெறும் 150km தான், பாண்டிச்சேரி விமான நிலையம் இருக்கிறது 👆🏿 அதனால், சென்னை விமான நிலையம் மூடிட்டாங்களா, அல்லது பயணிகள் விமானத்தில் பயணம் செய்யவில்லையா ⁉️ ஈரோடு சட்டசபை தேர்தலில் இதை பற்றி திய மு க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக மக்களிடம் இந்த விஷத்தை பிஜேபி செய்யும் துரோகத்தை எடுறைக்கவேண்டும் ‼️ செய்வார்களா ⁉️⁉️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
08-பிப்-202320:12:55 IST Report Abuse
Kundalakesi TN MPs has no guts. Again the Jallikattu kind of Hosur and state level protest has to happen.. public has to voice out their opinion in MP election.. avoid these dravidian parties. If MP is not voicing out, they should be questioned.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X