வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அங்காரா: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு, கடும் பனிக்கு மத்தியில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்திய சார்பில் மீட்பு படையினர் நிவாரண பொருட்களுடன் விரைந்துள்ளனர்.

துருக்கியின் தென்மேற்கே உள்ள காசியன்டெப்பை மையமாக வைத்து கடந்த திங்கட்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நில அதிர்வுகள் ஏற்பட்டன.
இதைத் தொடர்ந்து 7.5, 6.6 ரிக்டர் அளவுகள் என நேற்று முன்தினம் மட்டும் நான்குமுறை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், துருக்கி மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப்பணிகள் உடனடியாக துவங்கினாலும், கடும் ப னி, குளிர் மழையால் இது மெதுவாகவே நடக்கிறது. பெரியளவில் இயந்திரங்கள் இல்லாததால் மீட்பு பணிகள் மந்தமாக நடப்பதாக தெரிகிறது. பூகம்பத்திற்கு பிந்தைய நில அதிர்வுகள் இரு நாட்டு எல்லை பகுதிகளில் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால், மக்கள் பயத்துடன் தெருக்களில் , இடிபாடுகளுக்கு மத்தியில் தங்கி உள்ளனர்.இதனிடையே துருக்கி, சிரியாவில் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது.

உயிருடன் மீட்பு

துருக்கியில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த கைக்குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், குழந்தையின் குடும்பத்தினர் அனைவரும் பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதேபோல் இன்னும் சிலர் கட்டட இடிபாடுகளுக்கு மத்தியில் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்திய மீட்பு படை

துருக்கிக்கு, இந்திய மீட்பு படையினர், நிவாரண பொருட்களுடன் விமானம் மூலம் புதுடில்லிக்கு கிளம்பி சென்றனர்.
பாக்., பிரதமரின் பயணம் ரத்து:
பூகம்ப பாதிப்புகளை பார்வையிட துருக்கி மற்றும் சிரியாவுக்கு செல்ல, பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் செரீப் திட்டமிட்டிருந்தார்.
எனினும், மீட்பு மற்றும் நிவாரண பணிகள், தீவிரமாக நடந்து வருவதால், பாகிஸ்தான் பிரதமர் தனது வருகையை ஒத்திவைக்க வைக்க வேண்டும் என, துருக்கி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
துருக்கி அதிபர் எர்டோகனை சந்தித்து, நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இரங்கலை தெரிவிக்க, செல்ல இருந்த, பிரதமரின் பயணம், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி கலந்தாலேசித்து பின்னர் அறிவிக்கப்படும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
மீட்பு பணியில் மோப்ப நாய் படை
துருக்கி, சிரியாவில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், தேசிய பேரிடர் மீட்பு படையின், 100 பேர் குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில், பேரிடர் மீட்பு படையினரால், தயார் செய்யப்பட்ட 'லாபரேடர்' இன நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்பு படையின் இயக்குனர், அதுல் கர்வால் கூறியதாவது:2006 மற்றும் 2011ம் ஆண்டுகளில் ஜப்பானில் நடந்த இயற்கை சீற்றம், 2015ல் நேபாளில் நடந்த நில நடுக்க பாதிப்புகளை தொடர்ந்து, தற்போது, நான்காவது முறையாக, நம் மீட்பு படையினர் துருக்கியில் களமிறங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதில், பேரிடர் மீட்பு படையின், ஜூலி, ரோமியோ, ஹனி மற்றும் ரேம்போ ஆகிய நான்கு மோப்ப நாய்கள் அடங்கிய, மோப்ப நாய் குழுவும் ஈடுபட்டுள்ளது,' என்றார்.