அலையோடு விளையாடி... சர்ஃபிங்கில் சாதிப்போமா?

Updated : பிப் 08, 2023 | Added : பிப் 08, 2023 | |
Advertisement
தண்ணீர் விளையாட்டுகளில் அனைவருக்கும் பொதுவாக பிடித்தமானது சர்ஃபிங். அலையோடு அலையாக மோதி விளையாடுவது உற்சாகமான அனுபவமாகும். இந்தியாவில் 7,500 கி.மீ., தூரம் நீண்டுள்ள கடற்கரையில் ஆங்காங்கே சர்ஃபிங் விளையாட ஏராளமான இடங்கள் உள்ளன. மிகப்பெரிய அலைகள் பொதுவாக மே மற்றும் செப்டம்பர் மாதங்களில், பருவமழைக்கு முந்தைய மற்றும் பருவமழைக் காலங்களுக்கு இடையில் காணப்படுகின்றன.
surfingwatersportsinindia, surfing, watersportsinindia, watersports, surfingtips, tourism, tour, சர்ஃபிங், தண்ணீர்விளையாட்டுகள், சாகசம், சர்ஃபிங்டிப்ஸ், சுற்றுலா,

தண்ணீர் விளையாட்டுகளில் அனைவருக்கும் பொதுவாக பிடித்தமானது சர்ஃபிங். அலையோடு அலையாக மோதி விளையாடுவது உற்சாகமான அனுபவமாகும். இந்தியாவில் 7,500 கி.மீ., தூரம் நீண்டுள்ள கடற்கரையில் ஆங்காங்கே சர்ஃபிங் விளையாட ஏராளமான இடங்கள் உள்ளன. மிகப்பெரிய அலைகள் பொதுவாக மே மற்றும் செப்டம்பர் மாதங்களில், பருவமழைக்கு முந்தைய மற்றும் பருவமழைக் காலங்களுக்கு இடையில் காணப்படுகின்றன. மேற்குக் கடற்கரையானது துவக்கநிலையில் உள்ளவர்களுக்கு சிறந்தது. அதேசமயம் கிழக்குக் கரையில் வலுவான நீரோட்டங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, முதல் முறையாக சர்ஃபிங் விளையாடுபவர்களுக்கான சில டிப்ஸ்...

சர்ஃபிங் செய்ய கட்டாயமாக நீச்சல் பயிற்சி தெரிந்திருக்க வேண்டும். தகுதியான பயிற்சியாளரை கண்டுபிடிக்க வேண்டும். ​​சர்ஃபிங் பெடரேஷன் ஆஃப் இந்தியா (SFI) அங்கீகாரம் பெற்ற பள்ளியையோ அல்லது சர்வதேச சர்ஃபிங் சங்கத்தால் சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளரையோ தேர்ந்தெடுப்பது அவசியமானது. முதல் இரு நாட்களில் பயிற்சியாளர் போர்டில் நின்று அலை சவாரி செய்வது எப்படி என முறையாக பயிற்சியளிப்பார். அந்தமான் தீவுகளில் உள்ள சில கடற்கரைகள் எப்போதும் துவக்க நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்காது. எனவே, பயிற்சிப்பள்ளி சான்றளிக்கக்கூடிய இடங்களில் உரிய பயிற்சி பெறுவதும் அவசியமானது.


latest tamil news


வெளிநாடுகளில் சர்ஃபிங் செய்ய வெட்சூட்களை பலரும் அணிவர்; குளிர்ச்சியான தண்ணீருக்கு வெட்சூட்கள் கட்டாயமாக அணிய வேண்டும். ஆனால், வெளிநாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியக் கடல்களில் உள்ள தண்ணீர் மிகவும் வெப்பமானது. எனவே, வெட்சூட்கள் இந்தியாவில் அவசியமில்லாத ஒன்று. அதேவேளையில் சன் ஸ்கிரீன், ஷார்ட்ஸ், டி-சர்ட் மற்றும் டவல் ஆகியவை முதல்முறையாக சர்ஃப் செய்பவர்களுக்குத் தேவைப்படும்.

அகலமாக இருப்பதை விட குறுகலான சர்ஃபிங்போர்டைக் கையாளுவது எளிதாக இருக்கும் என்ற பலரின் கணிப்பு தவறானது. துவக்க நிலையில் எப்போதும் பெரிய சர்ஃப் பலகைகள் தான் வழங்கப்படும். அவை சிறந்த மிதவை தன்மையுடனும், நீண்ட நாட்களுக்கும் நிலையாக இருக்கக்கூடும். பாதுகாப்பு தன்மையும் இதில் அதிகமாக இருக்கக்கூடும் என்பது பயிற்சியாளர்களின் கருத்தாகும்.


latest tamil news


அனைத்து விளையாட்டையும் போன்றே இதற்கும் சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் உரிய வழக்கமான பயிற்சி தேவைப்படுகிறது. வாரம் இரு முறையாவது தவறாமல் பயிற்சி செய்ய வேண்டும். ஒரு ஆண்டுக்காவது கடினமாக உழைத்தால் மட்டுமே சர்ஃபிங்கில் நிபுணராக மாற முடியும்.

சர்ஃபிங் செய்யும்போது, ​​போர்டில் எழுந்து நிற்க அதிக நேரம் எடுக்காமல், விரைவாக செயல்பட வேண்டும். இது 'பாப்-அப்' என அழைக்கப்படுகிறது. ஒருசிலர் முதலில் முழங்காலில் எழுந்திருக்க முயற்சிப்பர். அப்போது பலகையில் எடை மாறுவதால், சமநிலையை மீறி விழக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் முழங்கால்களைப் பயன்படுத்தாமல், மேலே குதித்து நிற்க வேண்டும். அதேப்போல், போர்டில் உங்கள் கால்களின் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். போர்டின் முன்னால் அதிக நேரம் நின்றால் தண்ணீருக்கடியில் செல்ல வாய்ப்புள்ளது; நகர்ந்து செல்லவும் வாய்ப்பிருக்காது. எனவே, கால்களை போர்டில் எப்படி வைப்பது என்ற வழிமுறைகளையும் உரிய பயிற்சி செய்ய வேண்டும்.


latest tamil news


சர்ஃபிங் செய்யும் போது உங்கள் உடல் மற்றும் தலையின் இயக்கத்தைப் பொறுத்தே போர்டு திரும்பக்கூடும். நீங்கள் எங்கு திரும்புகிறீர்களோ, தண்ணீரில் அங்குதான் போர்டு செல்லும். எனவே, துவக்கநிலையில் நீங்கள் கீழே பார்க்கவே கூடாது. இல்லாவிட்டால் சமநிலையை இழந்து, திசை திருப்பப்படுவீர்கள். நீங்கள் செல்ல விரும்பும் திசையை மட்டுமே பார்க்க வேண்டும்.


தண்ணீரில் சர்ஃபிங் செய்வதால் உடலில் நீர்ச்சத்து குறைவதால், அதிகளவில் தண்ணீர் குடிப்பது அவசியமானது. அதேப்போல் பயிற்சிக்கு முன்னதாக சாப்பிட எளிமையான உணவை தேர்ந்தெடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X