சேலம்: கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க வந்த முதியவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சேலம், அம்மாபேட்டை, பெரியகிணறு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி, 55. மனைவி யசோதாவை, 13 ஆண்டாக பிரிந்து வாழும் இவர், நேற்று முன்தினம் தற்கொலை முடிவுக்கு வந்து, சேலம் கலெக்டர் அலுவலகம் முன், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து மீட்டனர். விசாரணயில் வலசையூரில், 900 சதுரடி நிலத்தில் பங்கு தராமல் ஏமாற்றி குடும்பத்தினர் அடித்து விரட்டியதாக தெரிவித்தார். பின் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று காலை, 4:00 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
நாமக்கல், பள்ளிபாளையத்தில் வசிக்கும் அவரது மகன் மோகன், நேற்று சேலம் டவுன் போலீசில் அளித்த புகாரில், 'தனிமையில் வசித்த தந்தை, மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், வயது முதிர்வால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்ற நிலையில் இறந்துவிட்டார்' என குறிப்பிட்டிருந்தார்.