வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: போலீஸ் மற்றும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கும் பெண் கைதிகளை கட்டாயப்படுத்தி, கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்படுவது, அரசியலமைப்புக்கு எதிரானது என, டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 1992ம் ஆண்டு கேரளா மாநிலம், கோட்டயத்தில் நடந்த, கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில், கன்னியாஸ்திரி ஷெபி கைது செய்யப்பட்டார். அப்போது, தன்னை கட்டாயப்படுத்தி, விருப்பத்திற்கு மாறாக கன்னித்தன்மை பரிசோதனைக்கு சிபிஐ உட்படுத்தியதாக டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, போலீஸ் மற்றும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கும் பெண் கைதிகளுக்கு, கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்படுவது, அரசியலமைப்புக்கு எதிரானது.
இது குறித்த அறிவிப்பை அனைத்து துறை அதிகாரிகளுக்கும், மத்திய உள்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வழங்க வேண்டும். என உத்தரவிட்டார்.