இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கோஹிஸ்தான் மாவட்டத்தில் காரகோரம் நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது, பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
இதையடுத்து பஸ் மற்றும் கார் அருகேயிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதில், 30 பேர் உயிரிழந்து உள்ளனர். 15 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.