சென்னை: 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு ஆதரவு இல்லை என,' அ.ம.மு.க., பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னையில், நிருபர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது: 10 நாட்களாக குக்கர் சின்னத்தில் ஓட்டு கேட்டு கொண்டிருந்தோம். ஆனால், சின்னம் கிடைக்காததாலும், நீதிமன்றம் செல்ல நாட்கள் இல்லாததாலும், போட்டியிட விரும்பவில்லை.
இத்தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., என, இரண்டு கட்சிகளுக்கும், எங்கள் ஆதரவு இல்லை. இரட்டை இலை சின்னம் தவறானவர்களின் கையில் உள்ளது. சின்னம் இருந்தால் மட்டும், வெற்றி பெற முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.