வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உரையாற்ற உள்ள பிரதமர் மோடி, மறுசுழற்சி 'பெட்' பாட்டிலில் இருந்து தயாரிக்கப்பட்ட நீல நிறத்திலான சிறப்பு உடையை அணிந்து பார்லிமென்டிற்கு வந்தார்.
இந்தியன் ஆயில் கார்பரேசன் (ஐஓசி) தயாரித்த இந்த ஆடையை, கடந்த திங்கட்கிழமை அன்று இந்திய எரிசக்தி வாரத்தை பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உடையை அணிந்து பார்லிமென்ட் வந்த பிரதமர் மோடி, ராஜ்யசபா நடவடிக்கையில் பங்கேற்றார்.

ஐஓசி மற்றும் ஆயுதப்படை வீரர்கள் அணிவதற்காக சிறப்பு உடை தயாரிப்பதற்காக10 கோடிக்கும் அதிகமான 'பெட்' பாட்டீல்கள் மறுசுழற்சி செய்யப்பட உள்ளது.