ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் தென் கடலில் மத்திய வருவாய் புலனாய்வுதுறை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இலங்கையில் இருந்து நாட்டுப் படகில் வந்த இருவர் பல கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை நடுக்கடலில் தூக்கி எறிந்தனர்.
இதையடுத்து அப்படகை சுற்றி வளைத்த அதிகாரிகள், இருவரை பிடித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, நடுக்கடலில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டியை, மத்திய வருவாய் புலனாய்வு துறையினர், இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மீட்பு பணி மேற்கொண்டனர்.