புதுடில்லி: ஆன்லைன் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியாக இருக்கும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமா? ஆன்லைன் விளையாட்டு பற்றிய வரைவு விதிகளில் ஆன்லைன் சூதாட்டம் இடம்பெறாதது ஏன்? . ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் இதுவரை அனுமதி வழங்கவில்லை. தமிழகத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?. என தமிழச்சி தங்கபாண்டியன் திமுக எம்.பி கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்து பேசியதாவது: ஏற்கனவே 19 மாநிலங்கள் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுமக முன்வந்தால் தேசிய அளவில் தடை மசோதா குறித்து அரசு ஆலோசிக்கும். தமிழக கவர்னர் மசோதாவை கிடப்பில் போட்டியிருப்பது குறித்த கருத்து கூற இயலாது. ஆன்லைன் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியாக இருக்கும்.

அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து ஒருமித்த கருத்தை எட்டிய பிற்கு ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்த கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். ஆன்லைன் விளையாட்டு, ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தே உள்ளோம். இவ்வாறு அவர் பதிலளித்து பேசினார்.