‛‛பஸ்சை சுத்தமா வைங்க. சந்தோஷமா பயணம் செய்யுங்க'': அரசு பஸ் கண்டக்டர் பேசும் வீடியோ வைரல்

Updated : பிப் 08, 2023 | Added : பிப் 08, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
மதுரை: மதுரையில் இருந்து கோவை வழியாக செல்லும் அரசுப் பஸ்சில் கண்டக்டராக இருப்பவர் சிவசெல்வம். இவர், இந்த பஸ்சில் பயணிக்க கூடிய பயணிகளிடம் மிகுந்த அக்கறையோடு பேசி வருவம் பழக்கத்தை கொண்டவர் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், கண்டக்டர் சிவசெல்வம் பயணிகளிடம் பேசும் வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சுத்தமா வெச்சிக்கணும்: அந்த வீடியாவில் கண்டக்டர்
அரசு, பஸ், கண்டக்டர், வீடியோ, வைரல்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: மதுரையில் இருந்து கோவை வழியாக செல்லும் அரசுப் பஸ்சில் கண்டக்டராக இருப்பவர் சிவசெல்வம். இவர், இந்த பஸ்சில் பயணிக்க கூடிய பயணிகளிடம் மிகுந்த அக்கறையோடு பேசி வருவம் பழக்கத்தை கொண்டவர் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், கண்டக்டர் சிவசெல்வம் பயணிகளிடம் பேசும் வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சுத்தமா வெச்சிக்கணும்:


அந்த வீடியாவில் கண்டக்டர் பேசியதாவது: “உங்க எல்லாருக்கும் வணக்கம்.. அரசு நமக்கு ஒரு நல்ல பஸ் கொடுத்து இருக்காங்க. அந்த பஸ்சினை சுத்தமா வெச்சிக்கணும். பழுது ஏற்படாம பார்த்துக்கணும். இந்த பொறுப்பு நம்ம எல்லாருக்கும் இருக்கு.
புளி மிட்டாய் தரேன்:


என்னடா கண்டக்டர் பஸ்ல ஏறுன உடனே சுத்தத்த பத்தி பேசுறாருனு நெனைக்காதிங்க. நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம். நீங்க சாப்பிட்ற கழிவுகள், பேப்பர்கள், பாட்டில்கள் எல்லாத்தையும் இந்த பஸ்ல இரு பக்களிலும் பை தொங்க விட்டு இருக்கேன்..... அதில் போடுங்க. இது நம்ம பஸ்ஸு.. இத நம்மதான் சுத்தமா வெச்சுக்கணும். பஸ் ல யாருக்காவது வாந்தி வந்தால் என்னிடம் கூறுங்க.. நான் உங்களுக்கு கவர் தருகிறேன்..புளி மிட்டாய் தரேன்..வாங்கி பயன்படுத்தி கொள்ளுங்கள்...டிக்கெட் நிலவரம்:


அதன்பிறகு, பயணிகளுக்கு பஸ்சின் டிக்கெட் விலை குறித்து அவர் பேசுகையில், இந்த வண்டி.. வாடிப்பட்டி வழியா போகும். வாடிப்பட்டி 22 ரூபாய்..

திண்டுக்கல் பைபாஸ் 60 ரூபாய்.. ஓட்டம்சத்திரம் 85 ரூபாய்... தாராபுரம் 115 ரூபாய், கோயம்புத்தூருக்கு 170 ரூபாய்.. உங்களால முடிஞ்ச அளவுக்கு சில்லறையா கொடுங்க. எல்லாருக்கும் உதவியா இருக்கும்.latest tamil news

பல தரப்பு மக்கள் பஸ்சில பயணம் பண்ணீறிங்க.உங்க பயணம் நலம் பெற வேண்டும்.. என அரசு போக்குவரத்து கழகம் சார்பாகவும், இந்த பஸ்சின் டிரைவர் மகேந்திரன் சார்பாகவும், கண்டக்ர் சிவசெல்வம் எனது சார்பாகவும் , உங்களுடைய பயணம் பயனுள்ளதாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.. எல்லாரும் சந்தோஷமா போலாம். ஜாலியா இருக்கலாம் எனக் கூறி தனது பேச்சை முடித்தார்.


இந்த வீடியோ பல்வேறு தர்ப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கண்டக்டர் சிவசெல்வம் பயணிகளிடம் பேசும் வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

09-பிப்-202310:17:18 IST Report Abuse
ஆரூர் ரங் கட்டணமில்லா பயணம் தேவையில்லை எனும் பெண்களுக்கு டிக்கெட் கொடுக்க அரசு உத்தரவிடவேண்டும்😋. பலர் மானஸ்தர்கள்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-பிப்-202304:52:26 IST Report Abuse
g.s,rajan இந்த லொட லொட லங்கடா பேருந்துகளை எல்லாம் எக்ஸ்பிரஸ் பஸ்ன்னு போட்டு அதிக கட்டணம் வசூலிக்குறாங்க ,குறிப்பா இந்த அரியலூர் ,தஞ்சாவூர் ,கும்பகோணம் ,ஜெயங்கொண்டம் போன்ற கோட்டம் பேருந்துகள் தரம் ,பராமரிப்பு மிகவும் மோசமாக இருக்கிறது .பேருந்துகளும் சரியான நேரத்திற்கு வருவதில்லை .போதுமான தாவும் பஸ்களும் இல்லை .மேலும் மிகவும் குறைந்த அளவுகளில் இயக்கப்படுவதால் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது .தனியார் பேருந்துகளில் கால் வைக்க இடம் இல்லாமல் நின்று கொண்டு பயணம் செய்யும் அவலம் இன்று வரை தொடர்கிறது .இதற்கு எப்போ விடிவு காலம் ???
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-பிப்-202304:42:58 IST Report Abuse
g.s,rajan நல்ல விஷயம் .பாராட்டுவோம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X