ஹூண்டாய் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை வெர்னா மாடலை விரைவில் அறிமுகம் செய்கிறது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா மாடல் மிகவும் பிரபலமான செடான் டைப் காராகும். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2020 வரை அடுத்தடுத்த தலைமுறை கார்களை இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வந்தது. பல்வேறு காரணங்களால் இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனம் வெர்னா மாடலுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் விதமாக விரைவில் அடுத்த தலைமுறை வெர்னா காரை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. அதன் ஸ்பை படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
![]()
|
புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடலின் உற்பத்தி பணிகள் வரும் மார்ச்சில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வரை இந்தியாவில் ஆண்டுக்கு 40 ஆயிரம் வெர்னா யூனிட்களை ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தி செய்து வந்த ஹூண்டாந் நிறுவனம் அடுத்த தலைமுறை வெர்னா மாடலை பொருத்தவரை ஹூண்டாய் நிறுவனம் ஆண்டிற்கு 70 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. அதுபோக, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான யூனிட்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
![]()
|
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணமாக ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஆலையில் வெர்னா மாடல் உற்பத்தியை ஹூண்டாய் நிறுத்தப்பட்டநிலையில், அடுத்த தலைமுறை வெர்னா மாடலின் உற்பத்தியை இந்திய ஆலைகளுக்கு மாற்ற ஹூண்டாய் திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கா போன்ற சந்தைகளுக்கு புதிய தலைமுறை வெர்னா மாடல் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
![]()
|
அடுத்த தலைமுறை வெர்னா மாடலின் தோற்றத்தை பொறுத்தவரை முன்பக்கம் ஹூண்டாய் கிரெட்டா மாடலைப் காட்சியளிக்கலாம். வைடு க்ரில், கூர்மையான எல்இடி ஹெட்லேம்புகள், வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், ஹூண்டாய் டக்ஸன் காரில் உள்ளதைப்போல, கேபினின் மற்ற அம்சங்களில் புளூலிங்க், எலக்ட்ரிக் சன்ரூஃப், லெவல் 1 ADAS, 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
![]()
|
ஹூண்டாய் நிறுவனம் இந்த புதிய வெர்னா மாடலின் முழுமையான விவரங்கள் குறித்து வெளியிடவில்லை. சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு முழு விவரங்கள் மற்றும் விலை நிலவரம் குறித்து தெரிய வரும்.