வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: லோக்சபாவில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
லோக்சபாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரை தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ராகுல் அளித்த பதில்: பிரதமர் அளித்த பதிலில் திருப்தி இல்லை. அதானி குறித்த விவகாரத்தை பிரதமர் கண்டுகொள்ளவில்லை. லோக்சபாவில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்கவில்லை.

அதானியின் நண்பர் இல்லையென்றால், விசாரணைக்கு பிரதமர் உத்தரவிடலாமே? அதானி விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன் அதானியை பிரதமர் பாதுகாக்கிறார். விசாரணை குறித்து எதுவும் பேசவில்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.