வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காசியாபாத்: உத்திரபிரதேசத்தில் நீதிமன்றத்திற்குள் புகுந்த சிறுத்தை மூன்று பேரை தாக்கி காயப்படுத்தியது.
உபி . மாநிலம் காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கம் போல் அலுவலக பணிகள் நடந்து கொண்டிருந்தன. இன்று மாலை 4 மணியளவில் மெயின் வாசல் வழியாக கோர்ட் வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்தது. முதல் தளத்தில் தலைமை நீதிபதி அலுவலகஅறைக்குள் புகுந்ததை கண்ட அங்கிருந்த சில வழக்கறிஞர்கள், போலீசார் பொதுமக்கள், கோர்ட் வளாகத்தை விட்டு வெளியே வந்தனர்.
|
அப்போது சிலர் மீது பாய்ந்து தாக்கியது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர். பின்னர் கோர்ட் அறை ஒன்றிற்குள் புகுந்தது. இதை கண்டு அங்கிருந்தவர்கள் அறையை கேட்டை மூடி சிறுத்தை சிறை வைத்தனர். சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. வனத்துறையினர் சிறுத்தை பிடிக்க முயற்சித்து வருகின்றனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு,காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிறுத்தை பிடிபட்டது
தொடர்ந்து சிறுத்தையை பிடித்த வனத்துறையினர் வனப்பகுதியில் விட கொண்டு சென்றனர்.