வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: நேசனல் ஹெரால்டு தொடர்பான பண மோசடி வழக்கில் கர்நாடகா காங். தலைவர் சிவக்குமார் நேரில் ஆஜராக கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கர்நாடகா சட்டபைக்கு இந்தாண்டு தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, மாநில காங். தலைவர் டி.கே. சிவக்குமார் மெகா பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.இந்த சூழ்நிலையில் , நேசனல் ஹெரால்டு தொடர்பாக பண மோசடி வழக்கினை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
![]()
|
இதே போன்று டி.கே. சிவக்குமார் நடத்தி வரும் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தில் நடந்துள்ள முறைகேட்டில் அதன் அறக்காவலராக உள்ள டி.கே.சிவக்குமார் மகள் ஐஸ்வர்ராயா மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து சம்மன் அனுப்பியுள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் புலனாய்வு ஏஜென்சிகள் மூலம் என் குடும்பத்தை பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது என டி.கே. சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.