சென்னை:'ரெனோ, நிஸான்' நிறுவனங்கள், தங்களுடைய 24 ஆண்டு கால கூட்டணியை மறுதுவக்கம் செய்யும் வகையில், புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
நீண்டகாலமாக இந்த கூட்டணியில் பல குழப்பங்கள் மற்றும் சச்சரவுகள் இருந்து வந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, நிஸானில், ரெனோ நிறுவனம் வைத்துள்ள பங்கை 15 சதவீதமாக குறைப்பதாகவும்; ரெனோவில், நிஸான் நிறுவனம் வைத்துள்ள பங்கை அதே 15 சதவீதத்திற்கு குறைப்பதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டு உள்ளன.
அத்துடன், ரெனோவின் புதிய மின்சார கார் தயாரிப்பில், 15 சதவீத பங்கு நிஸான் நிறுவனத்துக்கும் இருப்பதாக ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.
மேலும், லத்தீன் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் கூட்டு திட்டங்களின் மூலம் 'பிக் அப்' டிரக், எஸ்.யு.,விக்கள் மற்றும் மின்சார சரக்கு வேன்கள் என பலவற்றை தயாரிக்க உள்ளதாகவும், அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.