சென்னை: கடந்த 2021- - 22ம் ஆண்டில், சென்னை விமான நிலையம், 189.85 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இந்திய விமான நிலையங்களின் ஆணையம் இயக்கும் விமான நிலையங்களில், சென்னை விமான நிலையம் மிக முக்கியமானது. ஆண்டு தோறும் 1.7 கோடி பயணியர், சென்னை விமான நிலையம் வாயிலாக பயணிக்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையம், 2021 - 22ம் ஆண்டில், 190 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை விமான நிலையம், 2021 - 22ம் ஆண்டில், 189.85 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்த நஷ்டம், 2020- - 21ம் ஆண்டில், 278.63 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 2019 -- 20ம் ஆண்டில், 22.65 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருந்தது.
கொரோனா தொற்று காரணமாக, சென்னை விமான நிலையம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் லாபத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.