புதுடில்லி: வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், 'மாருதி சுசூகி' நிறுவனம், அதன் 'பலெனோ, எர்டிகா, எக்ஸ்.எல்.,6' ஆகிய கார்களுக்கு, புதிய இணைப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது 'ஓவர் தி ஏர்' எனும் மென்பொருள் வாயிலாக, மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, 'ஒயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ' இணைப்புகள், ஓட்டுனருக்கு முன் தோன்றும் 'ஹெட்ஸ் அப் டிஸ்பிளே'விலும், 'இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிஸ்ப்ளே'விலும் காட்டும்.
மேலும், 'டர்ன் பை டர்ன் நேவிகேஷன்' வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், எர்டிகா மற்றும் எக்ஸ்.எல்.,6 கார்களில், 'சர்ரவுண்டு சென்ஸ்' என்ற சவுண்டு சிஸ்டம் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த மேம்பாடுகள் அனைத்தும், தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த மேம்பாடுகளை, ஸ்மார்ட் போன்கள் வாயிலாகவோ அல்லது, மாருதி வலைதளம் வாயிலாகவோ செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, பிரெட்சா மற்றும் கிராண்டு விட்டாரா ஆகிய கார்களுக்கு இந்த வசதிகள் மேம்படுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத் தக்கது.