சென்னை:வனத் தீ மேலாண்மை தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டு முறைகள் குறித்த கையேட்டை, தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டார்.
வனத் தீ மேலாண்மை குறித்த ஒரு நாள் கருத்து பட்டறை, நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.
தலைமைச் செயலர் இறையன்பு, வனத் தீ மேலாண்மை தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டு முறைகள் குறித்த கையேட்டை வெளியிட்டார்.
வனத் துறை செயலர் சுப்ரியா சாஹு பெற்றுக் கொண்டார்.
மேலும், வனத் துறை தீ நிகழ்வுகளை கண்காணிப்பதற்கான மொபைல் போன் செயலியையும், தலைமைச் செயலர் அறிமுகப்படுத்தினார்.
அவர் பேசுகையில், ''மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, தீ தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
''மாநில பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்தி, மாவட்ட அளவில் வன அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். வனத் தீயை கட்டுப்படுத்த, இளைஞர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்க வேண்டும்,'' என அறிவுறுத்தினார்.