சென்னை:சென்னை -- அபுதாபி, சென்னை -- மஸ்கட் இடையிலான தினசரி விமான சேவையை, 'இண்டிகோ' விமான நிறுவனம், மார்ச் முதல் துவங்குகிறது.
இதன்படி, மார்ச் 26ம் தேதி இரவு 10:45 மணிக்கு சென்னையில் புறப்படும் விமானம், மறுநாள் அதிகாலை 1:35 மணிக்கு, ஐக்கிய அரபு ஏமிரேட்சில் உள்ள அபுதாபி நகரத்திற்கு செல்லும்.
அங்கிருந்து அதிகாலை 2:35 மணிக்கு புறப்பட்டு, காலை 8:15 மணிக்கு சென்னை வந்தடையும்.
இதேபோல, மார்ச் 26ம் தேதி நள்ளிரவு 12:45 மணிக்கு சென்னையில் புறப்படும் விமானம், மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு, ஐக்கிய அரபு ஏமிரேட்சில் உள்ள மஸ்கட் நகரத்தில்தரையிறங்கும்.
அங்கிருந்து அதிகாலை 4:00 மணிக்கு புறப்பட்டு, காலை 9:20 மணிக்கு சென்னை வந்தடையும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.