சென்னை:பள்ளிகளில் மன்ற செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில், மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், வெளிநாடு கல்வி சுற்றலாவுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வானவில் மன்றம், இலக்கிய மன்றம், வினாடி - வினா மன்றம், சிறார் திரைப்படம் உள்ளிட்ட செயல்பாடுகளில் போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பை, பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், பிப்., 13 முதல் பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, கலைத் திருவிழாவின் கீழ், மாநில அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். தற்போது, மன்ற செயல்பாடுகளின் கீழ் வெற்றி பெறும் மாணவர்களும், வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.