சென்னை:தனிநபர் மற்றும் தொழில் மேம்பாடு குறித்த படிப்பை, சென்னை ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை ஐ.ஐ.டி., சார்பில், தனிநபர் மற்றும் தொழில் முறை மேம்பாடு எனும் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த படிப்பில், மாணவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் பாடங்கள், செயல்முறைகள் இடம் பெற்றுள்ளன. இதன் வாயிலாக மாணவர்களின் தனித் திறன், தலைமைப் பண்பு ஆகியவை மேம்படும்.
இந்த படிப்பில், அனைத்து வகை இன்ஜினியரிங் மற்றும் இரட்டை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் சேர முடியும். மேலும், சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள், இதை விருப்பப் பாடமாக எடுத்து படிக்கலாம்.
மாணவர்களின் பல்வேறு விருப்பங்களை நிறைவேற்றும் நோக்கத்தில், தனிபட்ட மற்றும் மாற்றத்தக்க திறன்களை உருவாக்க, இத்தகைய தொழில் முறை பாடங்கள் உதவுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.