கூடலுார்:முதுமலை தெப்பக்காடு அருகே மாயார் ஆற்றை கடந்து செல்ல வசதியாக, கும்கி யானைகளை பயன்படுத்தி தற்காலிக பாலம் அமைக்கப்பட்டதால், பழங்குடி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை, தெப்பக்காடு -மசினகுடி சாலையில் மாயார் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.
இதனால், வனத்துறைக்கு சொந்தமான சாலையை, வாகனங்கள் தற்காலிகமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெப்பக்காடு யானைகள் முகாமை ஒட்டிய, யானைப்பாடி கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள், 1 கி.மீ., நடந்து தங்கள் கிராமத்துக்கு சென்று வந்தனர்.
இவர்களின் சிரமத்தை போக்க, மாயார் ஆற்றின் குறுக்கே, வளர்ப்பு கும்கி யானைகள் உதவியுடன், தற்காலிக மரப்பாலம் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இதனால், பாலத்தை கடந்து பழங்குடி மக்கள் எளிதாக கிராமத்துக்கு சென்று வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'யானைப்பாடி மக்களின் சிரமத்தை போக்க, கும்கிகளை வைத்து தெப்பக்காடு பகுதியில் தற்காலிக மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வெளி நபர்கள் இதை பயன்படுத்த அனுமதி இல்லை' என்றனர்.---
Advertisement