மதுரை:பாசிபட்டினம் கோவிலை பாதுகாக்க கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தொண்டி அருகே பாசிபட்டினம் உள்ளது. இங்கு பிற்கால சோழர்களால் கட்டப்பட்ட பாசி அம்மன் கோவில் உள்ளது. 850 ஆண்டுகள் பழமையான இக்கோவிலின் மேற்கு பகுதியில் மரங்கள் வளர்ந்துள்ளன. கோவில் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. கோவிலை புனரமைக்கக் கோரி, அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு நேற்று, அறநிலையத் துறை செயலர், கலெக்டருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.
Advertisement