திருநெல்வேலி:திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் 'பர்தா' அணிந்து சென்ற பெண்கள், போட்டோ எடுத்தது குறித்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, ஹிந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
நெல்லையப்பர் கோவிலில் சில நாட்களுக்கு முன், பர்தா அணிந்து சென்ற மூன்று பெண்கள் சுவாமி மற்றும் அம்மன் சன்னிதியில் போட்டோக்கள் எடுத்தனர். அவர்கள் யார் என்பது குறித்து, கோவில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அத்துமீறி நுழைந்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கோவிலில் பாதுகாப்பை பலப்படுத்தவும் கோரி, ஹிந்து முன்னணி மாநில செயலர் குற்றாலநாதன் தலைமையில், 20 பேர் கண்களில் கறுப்பு துணி கட்டி, நெல்லையப்பர் கோவில் அருகே போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Advertisement