வெள்ளத்தில் சேதமானவற்றை சீரமைக்காததால் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணியர் தவிப்பு

Added : பிப் 08, 2023 | |
Advertisement
ஒகேனக்கல்:ஒகேனக்கல்லில், வெள்ளப்பெருக்கின்போது ஏற்பட்ட சேதத்தை இன்னும் சரிசெய்யாததால், இங்கு வரும் சுற்றுலா பயணியர் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.கடந்த, ஆகஸ்ட், செப்., மாதங்களில் ஒகேனக்கல்லில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால்,
 வெள்ளத்தில் சேதமானவற்றை சீரமைக்காததால் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணியர் தவிப்பு

ஒகேனக்கல்:ஒகேனக்கல்லில், வெள்ளப்பெருக்கின்போது ஏற்பட்ட சேதத்தை இன்னும் சரிசெய்யாததால், இங்கு வரும் சுற்றுலா பயணியர் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.

கடந்த, ஆகஸ்ட், செப்., மாதங்களில் ஒகேனக்கல்லில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அத்திமரத்துகடவு பகுதியிலிருந்து ஐந்தருவிக்கு செல்லும் நடைப்பாதை, மெயினருவிக்கு செல்லும் நடைப்பாதை, சினி பால்ஸ் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் சேதமடைந்தன.

இதனால், சின்னாறு பரிசல் துறையிலிருந்து பரிசல்கள் இயக்கப்பட்டன. தற்போது, ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு, 1,000 கன அடியாக குறைந்ததால், சின்னாறு பரிசல் துறையிலிருந்து மாற்றி, வழக்கமான அத்திமரத்துகடவு பகுதியில் பரிசல்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது, சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ள நிலையில், சேதமடைந்த நிலையிலுள்ள ‍ஓகேனக்கல் சினி பால்சில் குழந்தைகள், பெண்கள் குளிக்க பாதுகாப்பாக இருந்த தடுப்பு கம்பிகள்; ஐந்தருவிக்கு செல்லும் நடைப்பாதை மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை.

இதனால், சுற்றுலா பயணியர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, அவர்களின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல்லில் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X