விழுப்புரம்:நுாறாவது வயதில் திருமண நாள் விழா கொண்டாடிய தம்பதியிடம், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆசி பெற்றனர்.
விழுப்புரம் மாவட்டம் அடுத்த காவணிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்; ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர், நேற்று முன் தினம் 100 வயதை எட்டினார். இவரது மனைவி தாயார் அம்மாள், 90.
இவர்களுக்கு பாலசுப்ரமணியன், உஷா, ஷீலா, லட்சுமி ஆகிய பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி பேரன், பேத்திகள், கொள்ளு பேரன்கள் என 50 பேர் வரை உள்ளனர்.
ராமகிருஷ்ணன், தாயார் அம்மாள் தம்பதிக்கு பூர்ணாபிஷேக விழா நடந்தது. தம்பதியிடம் உறவினர்கள், சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்களும் ஆசி பெற்றனர். கிராமிய இயற்கை சார்ந்த உணவை சாப்பிட்டு வருவதால், ஆரோக்கியமாக, 100 வயதை எட்டியுள்ளதாக ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.