திருப்புல்லாணி:பனைக்குளத்தில் போலி பாஸ்போர்ட் பெற வந்த, மதுரை தொழிலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளத்தைச் சேர்ந்தவர் அன்வர் ராஜா, 45. இவர் போலி பாஸ்போர்ட் தரும் ஏஜன்ட்.
இவரிடம் போலி பாஸ்போர்ட் பெற, மதுரை மாவட்டம், மேலுார், கொட்டாணிபட்டி மளிகை கடை தொழிலாளி கணேசன், 45, என்பவர் தேடி வந்தார்.
இதையறிந்த, 'கியூ' பிரிவு போலீசார், கணேசனை கைது செய்தனர். இலங்கை நபருக்கு போலி பாஸ்போர்ட் வழங்கிய வழக்கில், அன்வர் ராஜா ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.