திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 44.43 லட்சம் ரூபாய் கிடைத்தது.
இந்தக் கோவிலில் 11 உண்டியல்கள் உள்ளன. பக்தர்கள் உண்டியல்களில் அம்மனுக்கு காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை செலுத்துவர். சில மாதங்களாக உண்டியல்கள் திறக்கப்படவில்லை.
அவை நிரம்பியதால் கூடுதலாக ஐந்து உண்டியல்கள் வைக்கப்பட்டன. ஏழு உண்டியல்கள் நேற்று முன் தினம் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
ஹிந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் சிவராம்குமார் தலைமையில் தன்னார்வலர்கள், ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஏழு உண்டியல்களில், 44.43 லட்சம் ரூபாய் பணம், 441 கிராம் தங்கம் இருந்தது.
உதவி கமிஷனர்கள் வில்வமூர்த்தி, செல்வராஜ், ஆய்வர் அய்யனார், கண்காணிப்பாளர் வசந்தாள் உள்ளிட்டோர் கண்காணித்தனர்.
Advertisement