ம.பி.,யில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை

Added : பிப் 08, 2023 | |
Advertisement
குவாலியர்:மத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.ம.பி., மாநிலம், குவாலியர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் 7 வயது சிறுமி, சாலையில் சென்ற திருமண ஊர்வலத்தை பார்க்க சென்றாள். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். அந்தச் சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும்

குவாலியர்:மத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

ம.பி., மாநிலம், குவாலியர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் 7 வயது சிறுமி, சாலையில் சென்ற திருமண ஊர்வலத்தை பார்க்க சென்றாள்.

ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். அந்தச் சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினருடன் பார்த்ததாக சிலர் கூறினர். அவரிடம் விசாரித்தால், தான் பார்க்கவே இல்லை என கூறினார்.

இதையடுத்து, போலீசில் புகார் செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், பக்கத்து வீட்டுக்காரரிடம் தீவிர விசாரணை நடத்தினர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

அவர் அளித்த தகவல்படி விவசாய நிலத்தில் இருந்து சிறுமி உடல் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமியை கொலை செய்த உறவினரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X