பதோஹி:“உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோ நகரின் பெயரை மாற்றம் வேண்டும்,” என, துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
துணை முதல்வரான பிரஜேஷ் பதக் கூறியதாவது:
லக்னோ நகரம் 'லஷ்மண் நாக்ரி' என்றுதான் அழைக்கப்பட்டது. கடந்த 18ம் நூற்றாண்டில் நவாப் அசபுத் தவுலா இந்நகரின் பெயரை லக்னோ என மாற்றினார். எனவே, மீண்டும் லஷ்மண் நாக்ரி என்றே மாற்ற வேண்டும். காங்கிரஸ் எம்.பி., ராகுல், மன சமநிலையை இழந்து விட்டார். காங்கிரஸ் ஆட்சியில்தான் ஊழல் தலைவிரித்து ஆடியது.
இவ்வாறு அவர் கூறினார்.
உ.பி., பிரதாப்கர் தொகுதி பா.ஜ., - எம்.பி., சங்கம்லால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆகியோருக்கு நேற்று முன் தினம் அனுப்பிய கடிதத்தில், லக்னோ நகரின் பெயரை, லக்கன்பூர் அல்லது லஷ்மண்பூர் என மாற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.