புதுடில்லி:ராஜிவ் காந்தி புற்று நோய் மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி, புதுடில்லி உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, மருத்துவமனை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வெளிநோயாளி பிரிவில் 25 சதவீதம் மற்றும் உள்நோயாளி பிரிவில் 10 சதவீத ஏழைகளுக்கு மார்ச் 1ம் தேதி முதல் இலவச சிகிச்சை அளிக்கப்படும்' என, உறுதியளித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில், ராஜிவ் காந்தி புற்றுநோய் மருத்துவமனைக்கு, டில்லி மேம்பாட்டு ஆணையம் சலுகை விலையில் நிலம் ஒதுக்கப்பட்டது.