சிட்ரோன் நிறுவனம் தனது மலிவு விலை எலெக்ட்ரிக் காரான இ சி3 (Citroën e-C3)- மாடலை வெளியிட்டுள்ளது.
இந்திய எலெக்ட்ரிக் வாகனச்சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் சிட்ரோன் நிறுவனம், சி3, சி5, ஏராளமான மாடல்களை விற்பனை செய்து வெற்றி கண்டுள்ளது. இந்த வெற்றியை இரட்டிப்பாக்கும் விதமாக சிட்ரான் நிறுவனம் எலெக்ட்ரிக் கான்செப்டில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது தனது முதல் எலெக்ட்ரிக் காரான சிட்ரான் இசி3 மாடலை தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெற்ற மின்சார வாகனங்களுக்கான (Hyderabad E-Motor Show 2023) கண்காட்சியில் வெளியிட்டுள்ளது. இந்த காருக்கு ஏற்கனவே புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுக்கது.
![]()
|
எலெக்ட்ரிக் கான்செப்டில் இது மிகவும் மலிவு விலை கார் என்பதால் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் காரில் 29.2 kWh பேட்டரி பேக் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 320 கிலோமீட்டர்., தூரம் வரை பயணிக்க முடியும். இதேபோல், இதன் பேட்டரி பேக்கை வெகு விரைவில் சார்ஜ் செய்து கொள்ளும் விதமாக டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோக டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட் பயன்படுத்தி சார்ஜ் செய்யும்போது வெறும் 57 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும்.
![]()
|
இத்துடன், சிட்ரோன் நிறுவனம் மணிக்கு அதிகபட்சமாக 107 கிமீ பயணிக்கக் கூடிய மின் மோட்டாரை பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மோட்டார் 57 எச்பி பவரையும், 143 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதுதவிர, 10.2 அங்குலம் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிட்ரோனின் சி பட்டி (C Buddy) இணைப்பு தொழில்நுட்பம், குரல் கட்டளை அம்சம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ, சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் போன்ற எக்கச்சக்க வசதிகள் இடம் பெறவுள்ளது.
![]()
|
பாதுகாப்பு அம்சத்தை பொறுத்தவரை, பாதுகாப்பு அம்சங்களாக சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் காரில் இரட்டை ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், எஞ்ஜின் இம்மொபிலைசர், ஹை ஸ்பீடு அலர்டு சிஸ்டம் மற்றும் ஸ்பீடு சென்சிடிவ் ஆட்டோ டூர் லாக் போன்ற அம்சங்களும் இ-சி3 எலெக்ட்ரிக் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் ஆரம்ப விலை ரூ. 8.49 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஏற்கனவே சந்தையில் விற்பனையாகும் டாடா உள்ளிட்ட மற்ற நிறுவனங்களின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இந்த சிட்ரோன் இசி3 அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.