உடுமலை : மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மேல்நிலைப் பள்ளியில், 14-வது பள்ளி ஆண்டு விழா நடத்தப்பட்டது. பள்ளித் தாளாளர் ராஜ்குமார், தலைமை வகித்தார்.
முன்னதாக, முதல்வர் சைலஜா, ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி முதல்வர் சோமு பங்கேற்றார். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
அதில், நடனம், நாடகம், பேச்சு என பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள், பார்வையாளர்களை அசத்தும் வகையில், தங்களது திறமையை வெளிக்காட்டினர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.