பொள்ளாச்சி: ஆனைமலை ஒன்றியக்குழு கூட்டத்தை, திஷா பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு கூட்ட நடவடிக்கைகளை கேட்டறிந்தனர்.
ஆனைமலை ஒன்றியக்குழு கூட்டம், தலைவர் சாந்தி தலைமையில் நடந்தது. ஒன்றிய ஆணையாளர் பாலசுப்ரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சீனிவாசன் முன்னிலை வகித்தனர். அதில், 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றியக்குழு கூட்டத்தில், பொள்ளாச்சி திஷா பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தலைவர் மற்றும் ஒன்றிய அதிகாரிகள், கூட்ட நடவடிக்கைகள், ஒன்றிய நிர்வாகம் குறித்தும் விளக்கினர். அதிகாரிகள் கூறியதை மாணவர்கள் கவனமுடன் கேட்டறிந்தனர்.