திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், கடந்த மாதம் கடைசி வாரத்தில் தைக்கிருத்திகை மற்றும் இம்மாதம், 5ம் தேதி தைப்பூசம் ஆகிய முக்கிய திருவிழாக்கள் நடந்தன.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து மூலவரை தரிசித்தனர். அப்போது பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை ரொக்கம், தங்கம், வெள்ளி போன்றவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர்.
அந்த வகையில், 27 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கோவில் தக்கார் ஜெய்பிரியா, துணை ஆணையர் விஜயா ஆகியோர் முன்னிலையில், கோவில் ஊழியர்கள் உண்டியல் திறந்து நேற்று எண்ணினர்.
இதில், 90 லட்சத்து 76 ஆயிரத்து 417 ரூபாய் ரொக்கம், 528 கிராம் தங்கம், 5 கிலோ 382 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.