பொள்ளாச்சி : பிளஸ் 2 செய்முறை பொதுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி முதல், ஒன்பதாம் தேதி வரை நடத்த, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக, பள்ளிகளின் எண்ணிக்கையை பொறுத்து, இத்தேர்வு பிரிவு வாரியாக நடத்தப்படும்.
சில பள்ளிகளில், மாணவர்கள் முறையாக வகுப்புக்கு வருவதில்லை என்ற, புகார் எழுந்துள்ளது. அரையாண்டு தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கும், மாணவர்கள் முறையாக பள்ளிக்கு வராததே காரணம் என, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
இதனால், அடிக்கடி விடுப்பு எடுப்போரின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, பொதுத்தேர்வு எழுதுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. இதோடு, செய்முறை பொதுத்தேர்வில், முழு வருகைப்பதிவை உறுதி செய்ய, ஆவண செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.