சிறை வார்டன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி உயிரிழந்தார்.
கடந்த, 1998 பிப்.,14ல் கோவையில் பல இடங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இந்த பயங்கர தாக்குதலில், 58 பேர் உயிரிழந்தனர்; 252 பேர் படுகாயம் அடைந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பொருட்சேதம் ஏற்பட்டது.குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அபுதாகிர், 42, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், 1997ம் ஆண்டு ஆக., 29ம் தேதி மதுரை ஜெயில் துணை வார்டன் ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அபுதாகிருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த அவருக்கு சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடலநலப் பிரச்னைகள் இருந்ததால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.