திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், ஜே.என்.சாலை, ராஜாஜி சாலை உள்ளிட்ட, 27 வார்டுகளில், சாலையோர உணவகங்கள் ஏராளமாக உள்ளன. இவர்கள், 'கொரோனா' தொற்று காலத்திற்கு பின், மீண்டும் கடைகள் நடத்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதித்தது.
இதையடுத்து, மத்திய அரசு, பிரதமர் சிறு வியாபாரிகள் கடனுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தி, திரும்பிச் செலுத்தும் வகையில், 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் நகராட்சியில், சாலையோர வியாபாரிகள், சிற்றுண்டி கடை நடத்துவோர் என, 340 பேர் பதிவு செய்துள்ளனர்.
அவர்களுக்கு, நடமாடும் கடைகள் வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக, 30 பேருக்கு நடமாடும் கடைகள் வழங்கப்பட உள்ளது.
மேலும், மீதம் உள்ளவர்களுக்கு, விரைவில் இக்கடைகள் வழங்கப்பட உள்ளதாக, நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
Advertisement