உடுமலை : உடுமலை தோட்டக்கலை துறை சார்பில், பழ வகை நாற்றுகள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் பதிவு செய்து பயன்பெறுமாறு, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில், விவசாயிகளுக்கு தேவையான, மா, நெல்லி, கொய்யா, மிளகு, அத்தி, சீதா, எலுமிச்சை போன்ற பழ வகை நாற்றுகள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள, ஆண்டியகவுண்டனுார், கல்லாபுரம், ஜல்லிபட்டி ஆகிய கிராமங்களிலும், 2022 - -23ம், ஆண்டு அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ள, ஆலம்பாளையம், குருவப்பநாயக்கனுார், சின்ன குமாரபாளையம், வடபூதனம், கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார், சின்னவீரன்பட்டி, குறிஞ்சேரி, தீபாலப்பட்டி, மொடக்குப்பட்டி, தின்னப்பட்டி, ஜே.என்., பாளையம் ஆகிய கிராமங்களிலும், பழ வகை நாற்றுக்கள் வழங்கப்படுகிறது.
மேலும், வீட்டுத்தோட்டத்திற்கு தேவையான காய்கறி விதைகளும் வழங்கப்படுகிறது. பழவகை மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள்,தோட்டக்கலைத்துறையில் பதிவு செய்து பயன்பெறுமாறு, உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன ரம்யா தெரிவித்துள்ளார்.
Advertisement