வால்பாறை : வால்பாறை காமராஜ் நகர் பகுதியில், கொடுங்கலுார் பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிேஷக விழா நடக்கிறது.
நேற்று, அதிகாலை, 4:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், வேதிகார்ச்சனை, இரண்டாம் கால யாகம், நாமசந்தனம், மூல மந்திரயாகம், ஜெயாதி ஹோமம், மஹா பூர்ணாஹுதி தீபாராதனை நடக்கிறது.
இன்று, 10ம் தேதி காலை, 5:30 மணிக்கு கடம்புறப்பாடு, மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜையும் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
Advertisement