பொள்ளாச்சி : பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட அஞ்சலகங்களில் செல்வமகள் சேமிப்பு கணக்கு துவங்க, இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
பொள்ளாச்சி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் அறிக்கை வருமாறு:
அஞ்சல் இயக்குனரகத்தால், அம்ரித்பெக்ஸ்பிரஸ் திட்டம் நாளை, 10ம் தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம், ஒரு கோடி செல்வமகள் சேமிப்பு கணக்கு துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்று, 9ம் தேதி; நாளை, 10ம் தேதி ஆகிய இரு நாட்களில், நாடு முழுவதும் அதிகளவிலான பெண் குழந்தைகள் வசிக்கும் பகுதிகளில், பள்ளிகள், கல்வித்துறை, சுகாதாரத்துறை, அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றுடன், அஞ்சல்துறை ஒருங்கிணைந்து பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு கணக்குகளை அதிகளவில் துவங்க உள்ளது.
மத்திய அரசால் கடந்த, 2015ம் ஆண்டு செல்வமகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் பெண் குழந்தைகள் பெயரில், பெற்றோர் அல்லது பாதுகாவலர் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை துவங்கி முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்சம், 250 ரூபாய் முதல் செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். அதிகபட்சமாக ஆண்டுக்கு, 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
செல்வமகள் திட்டத்தில், 7.6 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில், இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும், இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
பெண் குழந்தைகள் அனைவரின் பெயரிலும் இச்சேமிப்பு கணக்கை துவங்க, பெற்றோர் முன்வர வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement