உடுமலை : உடுமலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேற்கொள்பவர்களுக்கான கடன் வழங்கும் முகாம் நடக்கிறது.
உடுமலை திருப்பூர் ரோடு, வியாபாரிகள் சங்க கட்டடத்தில், குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் மேற்கொள்பவர்களுக்கான கடன் உதவி வழங்கும் சிறப்பு முகாம், வரும் 13ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.
பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் தலைமை வகிக்கிறார். இதில், தாட்கோ, முத்ரா திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண் உட்கட்டமைப்பு திட்டம்.
தேசிய கால்நடை இயக்ககம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ், மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே, தொழில்துறையினர், வணிகர்கள், விவசாயிகள், இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.