உடுமலை : உடுமலை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டம் குறித்த கூட்டம் நடந்தது.
உடுமலை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், மின்னணு தேசிய வேளாண் சந்தை, (இ-நாம்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், மக்காச்சோளம், மல்லி, கொப்பரை உள்ளிட்ட பல்வேறு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேசிய அளவில், வியாபாரிகள் பங்கேற்பதால், விளைபொருட்களுக்கு, கூடுதல் விலை கிடைப்பதோடு, உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் தொகை செலுத்தப்படுகிறது.
இத்திட்டம் குறித்து, இணையதள ஆலோசனைக்கூட்டம் நேற்று, நடந்தது.
இதில், உடுமலை சுற்றுப்புற கிராமங்களைசேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இத்திட்டம் குறித்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் விளக்கினர்.
Advertisement